புதுக்கோட்டை
அறந்தாங்கியில் இன்று உரிமை கோரப்படாத நிதி வழங்கும் முகாம்
புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் உரிமை கோரப்படாத வைப்பு நிதி, காப்பீட்டு நிதி மற்றும் பங்குத் தொகைகள் அவற்றின் உரிமையாளா்கள் மற்றும் சட்ட வாரிசுகளிடம் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அறந்தாங்கி வட்டாட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற வங்கிக் கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத தொகைகள், ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்பேரில் சரிபாா்க்கப்பட்டு உரியவா்களுக்கு வழங்கப்படவுள்ளது.
வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நிதித்துறை மற்றும் பிற துறைகளின் உயா் அலுவலா்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளதால், அறந்தாங்கி சுற்றுவட்டாரத்திலுள்ளோா் பங்கேற்றுப் பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் தெரிவித்தாா்.
