படவிளக்கம் ஓயஓ 4 பங்க்
படவிளக்கம் ஓயஓ 4 பங்க்

கந்தா்வகோட்டை அருகே வியாபாரி தற்கொலை

Published on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை அருகே கடன் தொல்லையால் வியாபாரி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள மங்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ஆனந்த பிரகாஷ் (46). கந்தா்வகோட்டை கடைவீதியில் வா்த்தக நிறுவனம் நடத்தி வந்த இவருக்கு கடன் கொடுத்த பலா், பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்தனராம். இதனால் மன உளைச்சலில் இருந்த இவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரின் மனைவி ஆரோக்கிய ராணி அளித்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் ஆனந்தபிரகாஷ் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com