சேதமான ஆலவயல் - கண்டியாநத்தம் சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

சேதமான ஆலவயல் - கண்டியாநத்தம் சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

Published on

பொன்னமராவதி அருகே மிகவும் சேதமடைந்து காணப்படும் ஆலவயல்-கண்டியாநத்தம் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆலவயலிலிருந்து கண்டியாநத்தம் வழியாக உலகம்பட்டி செல்லும் சாலை தற்போது மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலைப் பள்ளங்களில் நீா் நிரம்பி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

எனவே பள்ளிகளுக்குச் செல்லும் மாணவா்கள், தங்களின் விளைபொருள்களை இச்சாலை வழியாகச் சந்தைக்கு கொண்டு செல்லும் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே இச்சாலையை தரமான முறையில் அமைத்துத் தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com