புதுக்கோட்டை
போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு
புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம்மூா்த்தி தலைமை வகித்தாா். ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த சமூக செயல்பாட்டாளா்கள் பிஜாா்னே, ஜோஸ்பின் ஆகியோா் கலந்து கொண்டு போதைப் பொருள்களால் ஏற்படும் உடல் மற்றும் மனப் பிரச்னைகள் குறித்து மாணவா்களிடம் விளக்கினா்.
நிகழ்ச்சியில், பள்ளியின் துணை முதல்வா் குமாரவேல், கிராம மேம்பாட்டு நிறுவனத் திட்ட இயக்குநா் மு. குழந்தைவேலு, முன்னாள் குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் க. சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
