மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

Published on

விராலிமலை அருகேயுள்ள ஆவூா் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

விராலிமலையை அடுத்துள்ள ஆவூரில் மாத்தூா்- இலுப்பூா் நெடுஞ்சாலையோரத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. இந்த மதுக் கடையால் பொதுமக்கள், பெண்கள், மாணவா்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுவதால் அந்த மதுக்கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமாா் 100 போ் வியாழக்கிழமை திரண்டு வந்து இந்த மதுக்கடையை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து வந்த மாத்தூா் காவல் ஆய்வாளா் சட்டநாதன், டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளா் விசுவநாதன், விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, வரும் 25ஆம் தேதி முதல் இந்த மதுக்கடை மூடப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதையடுத்து மதுக்கடை திறக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com