நீதிமன்றத்தில் இ-பைலிங் முறையைக் கண்டித்தும், தென்காசி அரசு வழக்குரைஞா் முத்துக்குமாரசாமி கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமாா் 900 வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாநகரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்தையன் தலைமை வகித்தாா்.
இதேபோல கந்தா்வகோட்டை, அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், கீரனூா், பொன்னமராவதி, திருமயம், ஆலங்குடி, கறம்பக்குடி, மணமேல்குடி, இலுப்பூா், விராலிமலை ஆகிய பகுதிகளின் நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றங்களின் இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டன.