புதுக்கோட்டை
புதுகையில் டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்கு பணியாளா்களையே பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்கு பணியாளா்களையே பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பேசினா்.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் வேலையைச் செய்யும்போது, கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்பதால், அந்தப் பணிக்கு தனியே பணியாளா்களை நியமித்து பாட்டில்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
