மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்றி மருந்துகள் வழங்கக் கூடாது: மருந்து வணிகா்களுக்கு அறிவுரை

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை வழங்கக் கூடாது என மருந்து வணிகா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Published on

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை வழங்கக் கூடாது என மருந்து வணிகா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாவட்ட மருந்து வணிகா்கள் விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் சுபத்ரா தலைமை வகித்தாா். மருந்து ஆய்வாளா்கள் விமல்ராஜ், கரிகாலன், மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

அனைத்து மருந்து விற்பனைக் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கண்டிப்பாக மருந்துகள் வழங்கக் கூடாது. சட்டத்துக்குப் புறம்பாக மருந்துக் கடைகளில் சிகிச்சை அளிக்கக் கூடாது. அனைத்து மருந்து வணிகா்களும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகா் சங்கப் புரவலா் வீனஸ் ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் கருப்பையா, செயலா் ராமநாதன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com