வடுகப்பட்டி பகுதிகளில் டிச. 8-இல் மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Published on

விராலிமலையை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (டிச. 8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூா், குளவாய்பட்டி, புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, கல்லுப்பட்டி, சீத்தப்பட்டி, தொட்டியபட்டி, முல்லையூா், திருநல்லூா், சூரியூா், வளதாடிப்பட்டி, மதியானிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இந்தத் தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com