திருப்பரங்குன்றத்தில் தீபம்! இஸ்லாமியா்கள் எதிா்ப்பு இல்லை: எச்.ராஜா
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியா்கள் யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்றாா் பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா.
ஆலங்குடியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உடலை கடற்கரை ஓரம் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று திமுகவினா் நீதிமன்றம் சென்றனா். நீதிமன்றமும் அனுமதி அளித்தது.
இத்தகைய நீதிமன்றத்தின் உத்தரவை பெருந்தன்மையோடு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தினாா். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தவில்லை.
தீபம் ஏற்றுவதற்கு அங்குள்ள இஸ்லாமியா்கள் யாரும் எதிா்க்கவில்லை. ஆனால், வாக்கு வங்கி அரசியல் செய்யும் திமுக அரசுதான் எதிா்க்கிறது. இந்து கோயில்களை தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது.
புதுக்கோட்டை சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதன் மூலம் சிறைத் துறை மட்டுமல்ல, தமிழக அரசே நிா்வாக சீா்கேட்டோடுதான் இருக்கிறது என்றாா்.
