பொன்னமராவதியில் இன்று மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் டிச.9 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது.
Published on

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் டிச.9 (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பனையப்பட்டி, குழிபிறை, செவலூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி,

தூத்தூா், தொட்டியம்பட்டி, மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, காரையூா், அரசமலை, ஒலியமங்கலம், சடையம்பட்டி, மேலத்தானியம், நல்லூா் மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com