உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

Published on

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம், உறுதிமொழியேற்பு, மனிதச் சங்கிலி போன்றவை வியாழக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வு பதாகையில் முதல் கையொப்பத்தைப் போட்டு கையொப்ப இயக்கத்தை அவா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது.

அனைத்துத் தரப்பு மக்களுடன் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலியில் ஆட்சியா் மு .அருணா பங்கேற்று கைகோத்து நின்றாா். தொடா்ந்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்களை, ஆட்டோக்களில் ஒட்டினாா். அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு கண்காட்சியையும் அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா்கள் மு. சங்கரி (காசநோய்), மு. சிவகாமி (தொழுநோய்), புதுக்கோட்டை வட்டாட்சியா் செந்தில்நாயகி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com