ஆலங்குடியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

Published on

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, சுமாா் 10 ஆயிரம் பேரைத் தோ்வு செய்யவுள்ளனா். எனவே, 18 முதல் 40 வயதுக்குள்பட்ட, எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைதேடுவோா் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

தங்களின் கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை நகல், புகைப்படம், சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் வந்து பயன்பெறலாம் என்றும், இதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பில் எந்தச் சிக்கலும் வராது என்றும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com