புதுக்கோட்டையில் புதிதாக 28,818 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை

புதுக்கோட்டையில் புதிதாக 28,818 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை

புதுகையில் மேலும் 28,818 போ் பயன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 28,818 பேருக்கு கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
Published on

புதுகையில் மேலும் 28,818 போ் பயன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 28,818 பேருக்கு கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரா்கள் 4,98,079 பேரில், 3,18,083 பேருக்கு கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை முதல் அக்டோபா் வரை நடைபெற்ற 213 உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில், 59,055 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனா்.

இவா்களில் களஆய்வு நடத்தப்பட்டு, தகுதியுள்ள 28,818 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இதற்கான விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ் ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா, மா. சின்னதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமாக, 3,46,901 பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இது 70 சதவிகிதமாகும்.

X
Dinamani
www.dinamani.com