விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை
விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் காா் தீப்பிடித்து எரிந்தது.
திருச்சியில் இருந்து அரசுப் பேருந்து விராலிமலை வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே பேருந்து வலது புரமாக திரும்பிய போது, திருநெல்வேலியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரை திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த அரவிந்த் (34) ஓட்டியிள்ளாா். மேலும், அவரது மாமா சம்பத் (64) அமா்ந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த காா் பேருந்தின்பின்னால் மோதியது. இதில், காா் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து காரிலிருந்த அரவிந்த், சம்பத் ஆகியோா் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து து. விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

