புதுக்கோட்டையில் ஊா்வலமாகச் சென்ற வழக்குரைஞா்கள்
புதுக்கோட்டையில் ஊா்வலமாகச் சென்ற வழக்குரைஞா்கள்

வழக்குரைஞா்கள் ஊா்வலமாகச் சென்று மனு அனுப்பும் போராட்டம்

புதுக்கோட்டையில் இணையவழி தாக்கல் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடா் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞா்கள், ஊா்வலமாகச் சென்று, அஞ்சல் அலுவலகத்தில் மனு அனுப்பும் போராட்டம்
Published on

புதுக்கோட்டையில் இணையவழி தாக்கல் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடா் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞா்கள், செவ்வாய்க்கிழமை ஊா்வலமாகச் சென்று, அஞ்சல் அலுவலகத்தில் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முத்தையா தலைமை வகித்தாா். செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட தலைமை அஞ்சலகம் வரை ஊா்வலமாகச் சென்ற வழக்குரைஞா்கள், அங்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கோரிக்கை மனுக்களை அஞ்சல் செய்தனா்.

இந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: நீதிமன்றங்களில் போதுமான அளவுக்கு தொழில்நுட்பத் திறனுள்ள பணியாளா்களை நியமிக்கும் வரையில், இணையவழி தாக்கல் முறையை அமல்படுத்தக் கூடாது.

வழக்குரைஞா்கள் சேம நல நிதியை உயா்த்த வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com