புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இறகுப் பந்துப் போட்டியில் சாம்பியன் வென்ற திருச்சி ஜமால் கல்லூரி ஆண்கள் அணியினருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டிய ஜெஜெ கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

பாரதிதாசன் பல்கலை. இறகுப்பந்துப் போட்டி: ஜமால் கல்லூரி அணி வீரா் - வீராங்கனைகள் சாம்பியன்!

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி அணிகளுக்கு இடையேயான இறகுப்பந்துப் போட்டியில் திருச்சி ஜமால் கல்லூரி அணியினா் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.
Published on

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி அணிகளுக்கு இடையேயான இறகுப்பந்துப் போட்டியில் திருச்சி ஜமால் கல்லூரி அணியினா் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப் பந்துப் போட்டிகள் புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றன.

இதில், பாரதிதாசன் பல்கலை. எல்லைக்குள்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் அணியினா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான போட்டிகளில் திருச்சி ஜமால் கல்லூரி அணிகள் வென்று சாம்பியன் பட்டம் வென்றன.

பெண்கள் பிரிவில், பல்கலைக்கழக கல்லூரி அணி 2-ஆம் இடத்தையும், நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரி அணி 3-ஆம் இடத்தையும், திருச்சி பிஷப் கல்லூரி அணி 4-ஆம் இடத்தையும் பெற்றன.

ஆண்கள் பிரிவில், திருச்சி பிஷப் கல்லூரி அணி 2-ஆம் இடத்தையும், புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி அணி 3-ஆம் இடத்தையும், பல்கலைக்கழக கல்லூரி அணி 4-ஆம் இடத்தையும் பெற்றன.

ஜெஜெ கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். கல்லூரி நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியம், கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் உள்ளிட்டோா் பாராட்டிப் பேசினா்.

ஏற்பாடுகளை, பல்கலைக்கழக விளையாட்டுக் குழுச் செயலா் மகபூப் ஜான் உள்ளிட்டோா் செய்தனா். இப்போட்டியில் சிறப்பாக பங்கேற்ற வீரா், வீராங்கனைகளைக் கொண்ட பல்கலைக்கழக அணி தோ்வு செய்யப்பட்டு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com