கண்டியாநத்தம் பட்டவன் சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் பூதன்வளவு பட்டவன் சுவாமி கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
Published on

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் பூதன்வளவு பட்டவன் சுவாமி கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று, பட்டவன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விக்னேஷ் சிவாச்சாரியாா் திருவிளக்கு மந்திரங்கள் ஓதி வழிநடத்த திரளான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை ஊா்ப்பொதுமக்கள் மற்றும் பூதன்நவளவு பூவைதென்றல் இளைஞா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com