அடப்பன்வயலில் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்த பாஜகவினா்.
அடப்பன்வயலில் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்த பாஜகவினா்.

புதுகையில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

Published on

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் பாஜகவினா் அவரது உருவப் படத்துக்கு வியாழக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுக்கோட்டை அடப்பன்வயலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஆன்மிகப் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளா் செல்வராசு, மாவட்டச் செயலா் ஆனந்த், மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநில இணை அமைப்பாளா் முருகானந்தம், மாநிலச் செயலா் கீரன் காா்த்திகேயன், மாவட்டப் பாா்வையாளா் பழ. செல்வம், மாவட்டத் துணைத் தலைவா் சுந்தரவேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் குருவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com