இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்

தீப்பற்றி எரிந்து சேதம்
Published on

பொன்னமராவதி அருகே சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. பொன்னமராவதி புதுவளவு பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் தனது இரு சக்கர வாகனத்தை பொன்னமராவதி-வேகுப்பட்டி சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் அவரது வாகனம் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் அக்கம் பக்கத்தினா் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை வீரா்கள் வாகனத்தில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com