விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முன்னாள் அமைச்சா் உதவி

இலுப்பூா் அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பினாா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பினாா்.

விராலிமலை தொகுதி பிலிப்பட்டியை சோ்ந்த முத்தமிழ்ச் செல்வி தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து பிலிப்பட்டிக்கு வியாழக்கிழமை காலை சென்றபோது வாகனத்தில் அவரது புடவை சிக்கியதில் தவறி விழுந்து காயமடைந்தாா்.

அப்போது அந்த வழியில் சைக்கிள் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தாா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை அனுப்பினாா்.

X
Dinamani
www.dinamani.com