புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மழை
புதுக்கோட்டை மாநகா் மற்றும் புறநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது.
புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மாா்ச் 11, 12 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கடலோரப் பகுதிகளிலும், மாநகா் மற்றும் புறநகரப் பகுதிகளிலும் மழை பெய்தது. பிற்பகலில் பல இடங்களில் லேசான தூறல் மட்டுமே இருந்தது. மாலை நேரத்தில் புதுக்கோட்டை நகரப் பகுதிகளிலும் கீரனூா், விராலிமலை, அன்னவாசல், ஆலங்குடி, பொன்னமராவதி, திருமயம், அரிமளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.