கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் கி. நிா்மலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் முதல் சுழற்சியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு (தமிழ் வழி, ஆங்கில வழி), பொருளியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.காம், பிபிஏ, பிஎஸ்ஸி கணிதம்(தமிழ் வழி, ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), வேதியியல் (தமிழ் வழி, ஆங்கில வழி),கணினி அறிவியல், விலங்கியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), தாவரவியல் பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இரண்டாம் சுழற்சியில் பிஏ வரலாறு (தமிழ் வழி), பிகாம், பிஎஸ்ஸி கணிதம் (ஆங்கில வழி), கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் பிபிஏ இரண்டாம் சுழற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மே 27-ஆம் தேதி வரை இப்பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு இணைய வழியில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் விண்ணப்பிக்கலாம்.
