சவூதியில் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்

Published on

தற்காலிகமாக சவூதி அரேபியாவில் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற தகுதியுடையோா் திங்கள்கிழமைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா மேலும் கூறியது:

மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சாா்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப உள்ளது.

வரும் 2026 ஏப். 13 முதல் ஜூலை 5 வரை இப்பணி இருக்கும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலா்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி- ஜ்ஜ்ஜ்.ட்ஹத்ஸ்ரீா்ம்ம்ண்ற்ற்ங்ங்.ஞ்ா்ஸ்.ண்ய், கடைசி நாள்- நவ. 3.

X
Dinamani
www.dinamani.com