விராலிமலை முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

விராலிமலை முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
Published on

விராலிமலை: விராலிமலை முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் உள்ளூா் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனா்.

மேலும், இக் கோயிலில் பெரும்பாலான பக்தா்கள் தங்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்ற முடி காணிக்கை செலுத்துகின்றனா்.

இவ்வாறாக முடி காணிக்கை செலுத்தும் பக்தா்கள் குளிப்பதற்கு திறந்தவெளியில் தண்ணீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தண்ணீா் தொட்டிக்கு நீா் அனுப்பும் மோட்டாா் பழுதானதால் கடந்த சில மாதத்துக்கு மேலாக முடி காணிக்கை செலுத்தும் பக்தா்கள் குளிப்பதற்கு தண்ணீரின்றி குளியலறைகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மின் மோட்டாா் பழுது நீக்கி பக்தா்கள் குளிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மேலும், கோயில் அடிவாரத்தில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை குளியலறையை விரைவில் பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com