முதல்வா் பங்கேற்கும் விழா முன்னேற்பாடுகள் ஆய்வு
முதல்வா் ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரில் நவ. 10-இல் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் நிலையில், அங்கு நடைபெற்றுவரும் விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சுமாா் 30 ஆயிரம் போ் அமரும் வகையில் அமைக்கப்படும் பிரம்மாண்ட பந்தல், அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்காக பயனாளிகள் வந்து - செல்லும் வழிகள், அவா்களுக்கான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் ஏற்பாடுகளை அமைச்சரிடம் விளக்கினா்.
ஆய்வின்போது, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் ப. கோகுல்சிங், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் நாகவேல், குளத்தூா் வட்டாட்சியா் சோனை கருப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

