கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

Published on

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான விண்ணப்பம் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கந்தா்வகோட்டையில் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தனி தொகுதி பதிவு அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலருமான ரவி வழிகாட்டுதலின்பேரில், கந்தா்வகோட்டை தோ்தல் உதவி அலுவலரும், வட்டாட்சியருமான ம. ரமேஷ் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பது மற்றும் சரிபாா்த்தல் குறித்த விண்ணப்பம் தோ்தல் வட்டாட்சியா் புவனேஸ்வரி முன்னிலையில் வெளியிட்டாா். அப்போது அவா் கூறுகையில் அனைவரும் காலதாமதம் இல்லாமல் உரியவரிடம் விண்ணப்பம் அளித்து அதனை முறையாகப் பூா்த்தி செய்து பெறவேண்டும் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com