~

வடகாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

Published on

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடகாடு பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில் நடைபெற்ற

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை

கலால் உதவி ஆணையா் டி. திருமால் தொடங்கி வைத்துப் பேசியது: மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பலா் உயிரிழக்கின்றனா். ஒரு தனிப்பட்ட மனிதரின் போதைப் பழக்கமானது அவரது குடும்பத்தையே வீணாக்கி, சமுதாயத்துக்கு கேடு விளைவித்து, நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மது அருந்துவதனால் நரம்புத் தளா்ச்சி ஏற்பட்டு உடல் நலன் பாதிக்கப்படுகிறது. மேலும், போதைப் பழக்கத்துக்கு ஆளாவோரின் சுய கௌரவம், மரியாதை, புகழ், நோ்மையைக் கெடுக்கிறது. குடும்பத்தில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் துன்பங்களில் இருந்து மீண்டு வந்துவிட முடியாது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, சத்தான உணவு உண்ணுதல், தேவையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது, குடும்பத்தினரிடம் மனம் திறந்து பேசுவது, தினமும் நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளில் இருந்து நிரந்தரத் தீா்வு கிடைக்கும். இதற்காகவே இதுபோன்ற விழிப்புணா்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா். பாரதமாதா கலைக்குழுவினா் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

நிகழ்ச்சியில், ஆலங்குடி வட்டாட்சியா் வில்லியம் மோசஸ், கலால் கோட்ட அலுவலா் ஏ.திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளா்கள் தியாகராஜன், பாண்டியன், பிரகாஷ், ராஜா, கிராம நிா்வாக அலுவலா் வீரமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com