காணாமல்போன வேளாண் கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை

Published on

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வேளாண் கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் ஊராட்சி, கீழப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அமரேசன் மகன் சிலம்பரசன் (17). வேளாண் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவா், அண்மைகாலமாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது பெற்றோா் கல்லூரிக்கு செல்லுமாறு கண்டித்ததோடு, சிலம்பரசன் வைத்திருந்த கைப்பேசியை வாங்கிக்கொண்டனராம். இதனால், சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சிலம்பரசன் வெளியேறியுள்ளாா். உறவினா்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்துள்ளாா்.

தகவலறிந்து சென்ற மழையூா் போலீஸாா், உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com