நாா்த்தாமலை காப்புக்காட்டில்
3500 பனைவிதைகள் விதைப்பு

நாா்த்தாமலை காப்புக்காட்டில் 3500 பனைவிதைகள் விதைப்பு

Published on

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை காப்புக் காட்டில் 3,500 பனை விதைகளை, வனத்துறையினா், பசுமைப் படையினா் புதன்கிழமை விதைப்பு செய்தனா்.

புதுக்கோட்டை கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை, புதுக்கோட்டை வனசரகம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் எஸ். ரெங்கராஜு முன்னிலை வகித்தாா். மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளி பசுமைப்படை மாணவா்கள், சேந்தாம்பட்டி கிராம வனக் குழுவினா் இதில் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com