எஸ்எஸ்எல்சி சமூக அறிவியல் பாட தோ்வுக்கு கூடுதல் விடுமுறை தேவை
எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு அட்டவணையில் சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதல் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் அரசுத் தோ்வு துறையால் வெளியிடப்பட்டுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு கால அட்டவணையில் சமூக அறிவியல் பாடத்துக்கு திருப்புதல் செய்ய அறிவிக்கப்பட்ட இரு நாள்களில் ஒரு நாள் பொது விடுமுறையான மகாவீா் ஜெயந்தி மற்றொரு நாள் பங்குனி உத்திரம், இந்துப் பண்டிகையாகும்.
கால அட்டவணையில் மற்ற பாடங்களுக்கு 4 முதல் 9 நாள்கள் இடைவெளி இருப்பதால், திருப்புதல் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாள்கள் மட்டுமே உள்ளன.
எனவே, தோ்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க, முழு மதிப்பெண் எடுக்க மாணவா்களைத் தயாா்படுத்த சமூக அறிவியல் தோ்வை ஏப். 2 அல்லது 6ஆம் தேதிக்கு மாற்ற வேண்டும்.
