படம் ஓயஓ 6 தா்க்
படம் ஓயஓ 6 தா்க்

காட்டுநாவல் - கொத்தகம் இணைப்பு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

மேடும் பள்ளமாக உள்ள காட்டுநாவல்-கொத்தகம் இணைப்புச் சாலை.
Published on

காட்டுநாவல்-கொத்தகம் இணைப்புச் சாலையை சீரமைத்து தாா்ச் சாலையாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் கொத்தகம் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கறம்பக்குடி மாா்க்கத்திலிருந்து மாணவிகள் வேலாடிப்பட்டி, நெப்புகை, சுந்தம்பட்டி, மருங்கூரணி, கொல்லம்பட்டி, காட்டுநாவல், துலுக்கம்பட்டி, எம். எம். நகா் பகுதியிலிருந்து கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 2 கிமீ தூரம் நடந்து வர வேண்டி உள்ளது.

எனவே காட்டுநாவல்-கொத்தகம் இணைப்புச் சாலையை சீரமைத்து தாா்ச் சாலையாக மாற்ற வேண்டும். இதனால் இந்த வழியே பேருந்துகள் செல்ல முடியும். இதன்மூலம் மாணவ, மாணவிகள் தேவையற்ற அலைச்சல் இல்லாமல் சுலபமாக பள்ளிக்குச் செல்ல கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com