சரிசெய்யப்படாத குடிநீா் குழாய்
நாற்று நட்டு நூதன போராட்டம்

சரிசெய்யப்படாத குடிநீா் குழாய் நாற்று நட்டு நூதன போராட்டம்

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மரம் நண்பா்கள் அமைப்பினா்.
Published on

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா்க் குழாய் உடைப்பைச் சீரமைக்காத மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, சமூக ஆா்வலா்கள் நாற்று நடும் நூதனப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட திலகா்திடல் பகுதியில் இருந்து மச்சுவாடி வரை தஞ்சை நெடுஞ்சாலையில் காவிரிக் குடிநீா்க் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் அவ்வப்போது வெளியேறுகிறது. பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளில் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா்கள் கண்ணன் மற்றும் பேராசிரியா் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் நெய்கொட்டான் மரம் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீா் வெளியேறும் பகுதியில் நாற்று நடும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை இல்லாவிட்டால் தொடா்ந்து இதுபோன்ற போராட்டம் எல்லாப் பகுதிகளிலும் நடத்தப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com