கந்தா்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா

கந்தா்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

கந்தா்வகோட்டை ராஜ கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பெரிய கடைவீதி பகுதியில் உள்ள சுவாமி ராஜ கணபதி கோயிலில் சுவாமிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து, தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால், தயிா், நெய், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான வாசனைப் பொருள்களால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வண்ணமிகு வாசனை மலா்களாலும் அருகம் புல் மாலை அணிவித்து சிறந்த முறையில் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அபிஷேக ஆராதனைக்குப் பிறகு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com