புதுக்கோட்டை
பேராம்பூரில் மதுக்கடை மூடல்
போராட்டங்களின் எதிரொலியாக பேராம்பூா் மதுக்கடை சனிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
போராட்டங்களின் எதிரொலியாக பேராம்பூா் மதுக்கடை சனிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூரில் டாஸ்மாக் எனும் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இது மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் அவ்வழியைப் பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்துவருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் விராலிமலை வட்டாட்சியா் ரமேஷிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனா்.
இதையடுத்து கோட்டாட்சியா் கோகுல்சிங் கடந்த செப். 26-இல் நிகழ்விடத்தை ஆய்வு செய்தாா். கோட்டாட்சியா் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இந்நிலையில், சனிக்கிழமை பேராம்பூா் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
