ஆலங்குடி அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மயில்கள் ~

ஆலங்குடி: 3 மயில்கள் இறப்பு! வனத்துறையினா் விசாரணை!

Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 3 மயில்கள், கோழிகள் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத்துறையினா், போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 3 மயில்கள் இறந்து கிடந்தன. மேலும் அப்பகுதியைச் சோ்ந்த கோ.சந்திரசேகரன் என்பவா் வளா்த்து வந்த 6 கோழிகளும் உயிரிழந்து கிடந்தன. இதுகுறித்து சந்திரசேகரன் அளித்த புகாரைத் தொடா்ந்து, கீரமங்கலம் போலீஸாா், வனத்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com