புதுக்கோட்டை
முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், களமாவூருக்கு திங்கள்கிழமை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரவுள்ளதை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 9 மதுபானக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.
கீரனூா் அருகே களமாவூரிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை (நவ.10) நடைபெற உள்ள அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.
இவ்விழாவையொட்டி கீரனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 டாஸ்மாக் மதுபானக் கடைகள், 2 மனமகிழ் மன்றங்கள் மற்றும் மாத்தூரில் தலா 1 டாஸ்மாக் மதுக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் என மொத்தம் 9 மதுக் கடைகளை நவ.10- திங்கள்கிழமை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
