புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினா்.

எஸ்ஐஆா்-ஐ கண்டித்து திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆரை கண்டித்தும், உடனடியாக அதை கைவிடக் கோரியும் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
Published on

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்) கண்டித்தும், உடனடியாக அதை கைவிடக் கோரியும் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரியண்ணன் அரசு, இராசு கவிதைப்பித்தன், காா்த்திக் தொண்டைமான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மதிமுக மாவட்டச் செயலா் எஸ்.கே. கலியமூா்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் வெள்ளைநெஞ்சன், இளமதி அசோகன், திராவிடா் கழகத்தின் மாவட்டத் தலைவா் அறிவொளி, முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவா் அஸ்ரப்அலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணிச் செயலா் நியாஸ், திமுக மாநகரப் பொறுப்பாளா்கள் மு. லியாகத் அலி, ராஜேஷ் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com