புதுக்கோட்டை
கோரைப்புற்களுக்கு இடையே கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
அறந்தாங்கி அருகே கோரைப்புற்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
அறந்தாங்கி அருகே கோரைப்புற்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரம் ஊராட்சி ஆத்தங்காடு அணைக்கட்டு பகுதியில் கோரைப்புற்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதையறிந்த, அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் சென்று பாா்த்தனா். அப்போது, பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், பெண் குழந்தை கிடந்தது தெரியவந்தது. பின்னா், குழந்தை மீட்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் நாகுடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
