முன்னாள் அரசு கொறடா அ. பெரியண்ணனின் 29-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய அமைச்சா் எஸ். ரகுபதி உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை
முன்னாள் அரசு கொறடா பெரியண்ணன் நினைவு நாள்
முன்னாள் அரசு கொறடாவும், புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் முன்னாள் செயலருமான அ. பெரியண்ணனின் 29-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுகவினா் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன், முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, துணை மேயா் மு. லியாகத் அலி, மாநகரப் பொறுப்பாளா் கே. ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடா்ந்து தெற்கு, வடக்கு மாநகர திமுக சாா்பில் கீழ 2-ஆம் வீதியில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

