அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மற்றும் வாரச்சந்தை நலச் சங்கத்தினா்.
அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மற்றும் வாரச்சந்தை நலச் சங்கத்தினா்.

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம்: இடம் தோ்வுக்கு எதிா்ப்பு!

Published on

அறந்தாங்கி வாரச் சந்தையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தினரும், வாரச் சந்தை நலச் சங்கத்தினரும் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

வாரச்சந்தைப் பகுதியில் பேருந்து நிலையம் அமைத்தால், ஏழை, எளிய வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், வேறு இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com