சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்தவா் ஸ்ரீதர்ராஜ் (23). புதுக்கோட்டையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், கடந்த ஜூலை மாதத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் புதுக்கோட்டை நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ஸ்ரீதர்ராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ஆா். கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், ஸ்ரீதர்ராஜுக்கு போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com