அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

அறந்தாங்கி அருகேயுள்ள பூவைமாநகா், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
அறந்தாங்கி அருகேயுள்ள பூவைமாநகா் அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.உடன் ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்
Updated on

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள பூவைமாநகா், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஆட்சியா் மு.அருணா தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா்

சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அரசு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பூவைமாநகா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 88 போ், தாந்தாணி அரசு

மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 37 போ் என மொத்தம் 125 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் மாணவா்களின் கல்வி பயணத்தை உயா்த்தி அவா்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றும் ஒரு காலச்சுவடாக அமைந்துள்ளது. இத்தகைய கல்வி நலத்திட்டங்களை

மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வுகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ.சண்முகம், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலா் மாயக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com