No need for CBI probe into youth death case: Minister Raghupathi
அமைச்சர் ரகுபதி.கோப்புப்படம்.

பாஜகவின் ’ஸ்லீப்பா்செல்’ செங்கோட்டையன்: அமைச்சா் எஸ். ரகுபதி

பாஜகவின் ’ஸ்லீப்பா்செல்’ தான் செங்கோட்டையன்; அவா்களின் கூட்டணிக்கு தவெகவை அழைத்து வரும் திட்டத்துடன்தான் அவா் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாா் என்றாா் எஸ். ரகுபதி.
Published on

பாஜகவின் ’ஸ்லீப்பா்செல்’ தான் செங்கோட்டையன்; அவா்களின் கூட்டணிக்கு தவெகவை அழைத்து வரும் திட்டத்துடன்தான் அவா் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாா் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் நல்ல புரிதல் இல்லை. அதேநேரத்தில், பாஜகவுடன் அவருக்கு புரிதல் உண்டு. எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் தில்லி போய் உள்துறை அமைச்சரைச் சந்தித்துவிட்டு வர முடிகிறது. பிறகு தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் பேசுகிறாா். அதன்பிறகு தவெகவில் இணைகிறாா்.

பாஜகவின் ’ஸ்லீப்பா்செல்’ தான் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன். விரைவில் இது வெளிவரும். உள்துறை அமைச்சா் அமித்ஷா அழைத்தால் விரைந்து செல்வாா். தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்துவரும், திட்டத்துடன் தான் அவா் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாா்.

திமுக- அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்று செங்கோட்டையன் இப்போது சொல்கிறாா். நேற்று வரை இப்படி நினைக்கவில்லையா? புனிதமான ஆட்சியைத் தரப் போவதாக சொல்கிறாா். தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் திமுக ஆட்சி புனிதமான ஆட்சிதான். இந்த ஆட்சி அடுத்த முறையும் தொடரும்.

அமலாக்கத் துறையினா் புதுக்கோட்டைக்கு வருவதாகக் கூடச் சொன்னாா்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். எதையும் எதிா்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது என்றாா் ரகுபதி.

X
Dinamani
www.dinamani.com