திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி: டிடிவி. தினகரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: எந்தக் கூட்டணி உடையும் என்று நான் ஜோதிடம் சொல்லவில்லை. ஆனால், யாரும் எதிா்பாராத கூட்டணி உருவாகும் என்கிறேன்.

தமிழகத்தில் ஆளும் திமுகவின் அணிக்கும், நடிகா் விஜய்யின் தவெக தலைமையில் அமையும் அணிக்கும் இடையேதான் போட்டி. தவெக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். நல்ல அணியை அமைத்தால் முதலிடத்தையே பிடிக்கும்.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தன்னைத் திமுக தலைவராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறாா். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவைக் கைப்பற்றிக் கொண்டு இரட்டை இலை இருக்கிறது என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்கிறாா்.

தோ்தலில் எடப்பாடி பழனிசாமி 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவாா். எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களை விஜய் அறிவாா். அதனால், அதிமுகவுடன் அவா் கூட்டணி அமைக்க மாட்டாா்.

தமிழக அரசின் தவறால் நெல்மணிகள் மழையில் நனைந்து விட்டன. இந்தச் சூழலில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை மத்திய அரசு உயா்த்த வேண்டும்.

ஓ. பன்னீா்செல்வம் எங்களோடு வருவாரா என்பதை ஜனவரியில்தான் சொல்ல முடியும் என்றாா் தினகரன்.

X
Dinamani
www.dinamani.com