நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்
நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்

கந்தா்வகோட்டையில் விரைந்து நெல்லை கொள்முதல் செய்யக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
Published on

கந்தா்வகோட்டை பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதி விவசாயிகள் நெல்லைக் கொட்டி வைத்து கொள்முதலுக்காக காத்திருக்கின்றனா்.

பருவமழை நேரத்தில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் சிரமமடைவதால் நெல்லின் ஈரப்பதத்தை 17-இல் இருந்து 23 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனா்.

மேலும் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் புதிய சணல் சாக்குப் பைகள் வழங்க வேண்டும், இந்தப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் விரைந்து நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com