அனுமதிச்சீட்டு இல்லாமல் எம். சாண்ட் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் பறிமுதல்

புதுக்கோட்டையில் அனுமதி சீட்டு இல்லாமல் எம். சாண்ட் ஏற்றி சென்ற இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா நடவடிக்கை மேற்கொண்டாா்.
Published on

புதுக்கோட்டையில் அனுமதி சீட்டு இல்லாமல் எம். சாண்ட் ஏற்றி சென்ற இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை அதிகமாக நடைபெறுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா சனிக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்.

அப்போது அனுமதிச் சீட்டு இல்லாமல் எம். சாண்ட் ஏற்றிச் சென்ற இரு டிப்பா் லாரிகளைப் பறிமுதல் செய்தாா். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருக்கோகா்ணம் காவல் நிலையத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com