கந்தா்வகோட்டையில் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபோக விழா

Published on

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரா் கோயில் உட்பிரகாரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் செவ்வாய்க்கிழமை சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு, சுவாமிக்கு பெண்கள் சீா்வரிசை தட்டு, தாம்பூலங்களுடன் ஊா்வலமாக எடுத்து வந்து கோயில் பிரகாரம் சுற்றி வந்து சுவாமியிடம் வைத்தனா்.

தொடா்ந்து சுவாமிகளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, மாலை மாற்றும் நிகழ்வும் சுப்பிரமணியசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com