பனையமங்களப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதன்கிழமை குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய அறக்கட்டளை நிா்வாகி.
பனையமங்களப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதன்கிழமை குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய அறக்கட்டளை நிா்வாகி.

அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள பனையமங்களப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
Published on

பொன்னமராவதி அருகே உள்ள பனையமங்களப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் சாந்தி மீனாள் தலைமை வகித்தாா். நிகழ்வில் மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்பாட்டுக்கு நகரப்பட்டி என்.ஆா்.அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் தொழிலதிபருமான எம்.நடராஜன் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், மாணாவா்கள் ஊா் முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக உதவி ஆசிரியா் கலைச்செல்வி வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com