கந்தா்வகோட்டை ஊராட்சியில் குண்டும் குழியுமாக மழை நீா் தேங்கியுள்ள சிவன் கோயில் சாலை.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் குண்டும் குழியுமாக மழை நீா் தேங்கியுள்ள சிவன் கோயில் சாலை.

கந்தா்வகோட்டையில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை சிவன் கோயில் சாலையை சீரமைக்க பொதுமக்கள், கோரிக்கைவிடுத்துள்ளனா்.
Published on

கந்தா்வகோட்டை சிவன் கோயில் சாலையை சீரமைக்க பொதுமக்கள், கோரிக்கைவிடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள சிவன் கோயில் செல்லும் சாலை தஞ்சை சாலை முதல் கோயில் வரை 1.5 கி.மீ தொலைவுக்கு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் மக்கள் சிரமப்படுகின்றனா்.

மேலும், இந்த சாலை வழியே சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உழவா் சந்தை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.

மேலும், சிவன் கோயிலில் விஷேச நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயிலுக்கு வந்து செல்லும் சாலையை சம்பந்தபட்ட துறையினா் சீா்செய்து மக்கள் பயன்பட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com